என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கர்நாடக முன்னாள் மந்திரி
நீங்கள் தேடியது "கர்நாடக முன்னாள் மந்திரி"
பெங்களூருவில் இன்று கைதான கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியை 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #JanardhanReddy #judicialcustody
பெங்களூரு:
பொருளாதார அமலாக்கத்துறை பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக நடத்திவந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர். இன்று பிற்பகல் ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி முன்னர் இன்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 24-ம் தேதிவரை ஜனார்த்தன ரெட்டியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #JanardhanReddy #judicialcustody
கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். #JanardhanReddy #JanardhanReddyArrest
பெங்களூரு:
பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை காவலில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #JanardhanReddy #JanardhanReddyArrest

அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். #Karnataka #JanardhanaReddy
பெங்களூரு:
அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.
இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.
ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.
இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

×

X